Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியால் வந்த வினை…. “தற்காப்புக்காக அடித்தேன்” கணவரை கொன்ற மனைவி வாக்குமூலம்…!!

குடிபோதையில் தாக்கிய கணவரை மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அடுத்த கருப்பக்காள் தோட்டம் பகுதியில் வசித்துவரும் சிவப்பிரகாசம்-மகேஸ்வரி தம்பதியினருக்கு மோகனப்பிரியா, லோகநாயகி என இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பிரகாசம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் நன்றாக குடித்துவிட்டு வர மனைவி தட்டி கேட்டதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படவே மனைவியை கணவன் முதலில் தாக்க, அதனால் ஏற்பட்ட கோபத்திலும், தன்னை தற்காத்துக்கொள்ளவும்  வீட்டிலிருந்த கட்டையால் கணவன் தலையில்  பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவப்பிரகாசம் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

பின் தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சிவபிரகாசத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்க, காவல்நிலையத்தில்  தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், தற்காப்புக்காக கணவனை கட்டையால் அடித்துக் கொன்றதை மனைவி ஒப்புக்கொள்ள அவரை காவல்துறையினர் கைது செய்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |