பிரேசிலில் தம்பதியருக்குள் நடந்த தகராறில், கணவனை கொன்று பிறப்புறுப்பை எண்ணெய்யில் பொறித்தெடுத்த கொடூர பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகிலேயே எங்கும் நடந்திருக்காத அருவருக்கத்தக்க, அதிர்ச்சியான, கொடூர சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் வசிக்கும் தம்பதியர் ஆண்ட்ரே- கிறிஸ்டினா மச்சாடோ. இவர்களுக்கு 8 வயதுடைய மகன் மற்றும் 5 வயதுடைய மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதியன்று இரவில் இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டினா தன் கணவரை கொன்றுவிட்டார். எனவே அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது நிர்வாணமாக கிடந்த ஆண்ட்ரேவின் உடல் சிதைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்துவிட்டனர்.
அதன்பின்பு கிறிஸ்டினாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், கணவரின் பிறப்புறுப்பை வெட்டி எண்ணையில் பொறித்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் காவல்துறையினர் ஆடி போய்விட்டனர். மேலும், அவர் தன் கணவர் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்தால் கொன்றதாகவும் கூறியுள்ளார். உடனடியாக கிறிஸ்டினா கைது செய்யப்பட்டார்.
எனினும் காவல்துறையினர் அவருக்கு மனநிலை பாதிப்பு இருக்கலாம் என்று கருதி மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.