சென்னை அருகே மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து மீண்டும் வேலைக்கு சென்று பணியிடத்தில் இருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மனைவி அழைப்பை ஏற்கவில்லை.
வேலைக்கு செல்லும் முன் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கத்து வீட்டினர் தொடர்புகொண்டு அவரை சென்று பார்த்து சொல்லியுள்ளார்.அப்போது அக்கம் பக்கத்தினர் மணிகண்டன் சென்று பார்த்தபோது ராதிகா பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மணிகண்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த மணிவண்ணன் மனைவி பிணமாக தொங்குவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மனைவியின் மரணத்தால் வேதனையில் இருந்த மணிகண்டன் ராதிகா தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில், அதே துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.