Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உன்கூட வர மாட்டேன்… கணவரின் மூர்க்கத்தனமாக செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கணவன் உளியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மார்ட்டின் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை கவனித்து கொண்டு எலிசபெத் கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டிலேயே தங்கியுள்ளார். அதன்பின் மார்ட்டின் தனது மனைவி எலிசபெத்தை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் எலிசபெத் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த மார்ட்டின் தான் மறைத்து வைத்திருந்த உளியால் எலிசபெத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த எலிசபெத்தின் தாயார் மேரி என்பவர் அதனை தடுக்க முயற்சி செய்த போது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அருகில் உள்ளவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கங்கரணை காவல்துறையினர் மார்ட்டினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |