மத்தியபிரதேசத்தில் மனைவிக்கு பயந்து பின் குறிப்புடன் விடுப்பு அளித்த காவலாளர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில் ஒரு காவலர் தனது மைத்துனரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள மேலதிகாரியிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு ஒன்று எழுதி கொடுத்துள்ளார். காவலர் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. அதுபோல மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த திலீப் குமார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் தனது மைத்துனருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை விடுப்பு வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு விட்டு விடாமல் பின்குறிப்பு எனக்கூறி அந்த விடுப்பு எனக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் என் மனைவியிடம் நான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எழுதியுள்ளார்.
இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதம் போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீஸ் டைரக்டர் ஜெனரல் உபேந்திர ஜெயின் கூறுகையில் விடுப்பு கொண்டுள்ள காவலருக்கு நிச்சயம் விடுப்பு கிடையாது. இப்படி ஒரு காரணத்தைக் கூறி விடுப்பு கேட்டால் வழங்க முடியாது. மேலும் அவரை பற்றி விசாரித்ததில் கடந்த 11 மாதங்களில் 55 நாட்கள் விடுப்பு எடுத்து உள்ளார்.