Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் வீரையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |