மனைவியை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, இளைஞர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு, மண்டியா மாவட்டம் நாகமங்களா கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கும் அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த அமுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஊர் சுற்றுவது நெருக்கமாக இருப்பது போன்று இருந்து வந்துள்ளன. லோகேஷ் ஏற்கனவே திருமணமானவர் என தெரிந்தும் பல நேரங்களில் தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்துள்ளார் அமுல்யா.
தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள கோரி பலமுறை கேட்டும் லோகேஷ் மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் தனியார் விடுதியில் உல்லாசமாக இருந்தபோது மனைவியைக் கைவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷ் இடம் கேட்டுள்ளார். சண்டை ஏற்பட்டுள்ளது லோகேஷ் ஆத்திரத்தில் அமுல்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் தானும் தற்கொலை செய்ய முடிவு செய்து தனது நண்பனின் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். போலீஸ் உதவியுடன் அந்த ஹோட்டலை அடைந்த அவரது நண்பர் லோகேஷ் அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அமுல்யா படுக்கையில் பிணமாக கிடந்த நிலையிலும் கைப்பற்றினர். இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.