சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் தனது தோழியுடன் கைதாகி உள்ளார்.
சென்னை நெற்குன்றத்தை அடுத்த சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நாகராஜன் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று இரவு சண்டை ஏற்படவே, காயத்ரி வீட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.பின் காலை நாகராஜ் வெகு நேரம் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின் வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது நாகராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காயத்திரி தனது தோழி பானுவின் உதவியுடன் கணவர் உறங்கிக்கொண்டிருந்தபோது தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்துவிட்டு அதனை சண்டை போல சித்தரித்து வீட்டை விட்டு வெளியேறுவது போல் நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பின் காயத்ரியும்,பானுவையும் கைது செய்த காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.