என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வரும் கணவரை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வருபவர் நெய்வேலியை சேர்ந்த பழனிவேல். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் பழனிவேல் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் சடலம் கை கால் கட்டப்பட்ட நிலையில் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து நெய்வேலி டவுன்சிப் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அஞ்சலை 4 பேருடன் சேர்ந்து தனது கணவனை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்திசாலித்தனமாக விபத்து என நாடகமாடுவதற்கு செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் பழனிவேலின் சடலத்தை காரில் வைத்து எரிக்க முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஞ்சலையிடம் விசாரணை நடத்திவரும் போலீசார் கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.