கணவர் ஒருவர் தனது மனைவிக்காக கிணறு தோண்டியுள்ள சமபவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் தம்பதிகள் பரதன் – சரளா. இந்நிலையில் சரளா தண்ணீருக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அதன் மூலமாக கஷ்டப்பட்டு தண்ணீர் கொண்டு வந்துள்ளார். ஒருநாள் அந்த குழாயும் பழுதடைந்து உள்ளதால் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். இதை சரளா தன்னுடைய கணவனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பரத்தன் உடனடியாக தனது மனைவிக்காக கிணறு தோண்ட வேண்டும் என்று முடிவு செய்து தனது வீட்டில் உள்ள காலி இடத்தில் 15 நாட்களில் தானே சிரமப்பட்டு கிணறு தோண்டியுள்ளார்.
அவரின் முயற்சி வீண் போகாமல் 15 அடி ஆழத்திலேயே தண்ணீர் வந்துள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பரதன் கூறுகையில், முதலில் கிணறு தூண்டுவதாக கூறியபோது தனது மனைவி சிரித்ததாக கூறியுள்ளார். பின்னர் கிணறு தோண்டியதில் அதிகம் தண்ணீர் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது