விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை லண்டனில் இருக்கும் உயர்பாதுகாப்பு சிறையில் இன்று திருமணம் செய்கிறார்.
விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே, அரசு தொடர்பான ரகசியங்களை ஹேக் செய்ததற்காக கடந்த 2019 ஆம் வருடத்தில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பு லண்டனில் இருக்கும் ஈக்வடார் தூதரகத்தில் ஏழு வருடங்களாக வசித்திருந்தார். அப்போது கடந்த 2011-ஆம் வருடத்தில் லண்டன் தூதரகத்தில் இருந்த சமயத்தில் ஸ்டெல்லா மோரிஸ் என்பவரை சந்தித்திருக்கிறார்.
அதன்பிறகு, கடந்த 2015ஆம் வருடத்திலிருந்து இருவரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், இன்று இவர்களுக்கு சிறையில் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது திருமணமானது பெல்மார்ஷ் சிறையில் உறவினர்கள் பார்வைக்கான நேரத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.