Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் நடந்த அட்டூழியம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கோயிலுக்குள் கரடி புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காமராஜர் நகர் பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்குள் அதிகாலை 4 மணி அளவில் புகுந்த கரடி கோவில் கதவை உடைத்து சேதப்படுத்தியதியதோடு, பூஜைக்கு வைத்திருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளது. இதனையடுத்து அந்த கரடி விளக்கில் இருந்த எண்ணெயை குடித்து விட்டு அங்கிருந்து சென்றது.

இதனை தொடர்ந்து காலை 7 மணியளவில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கரடி அட்டகாசம் செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் வெளியே செல்ல பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடிகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |