ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளியை காட்டெருமை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் குமார் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக வால்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் சிறுகுன்றா எஸ்டேட் மேல் பகுதிக்கு ஸ்கூட்டியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது ஸ்கூட்டி தேயிலைத் தோட்டப் பகுதி வழியாக சென்று கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு வந்த காட்டெருமை இவரது ஸ்கூட்டியை முட்டித் தள்ளியுள்ளது.
இதில் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூலி தொழிலாளியை காட்டெருமை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.