மர்ம நபர் ஒருவர் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி பகுதியில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது. இந்த காட்டு யானை கேத்தி சேலாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் காட்டெருமையை தாக்கியுள்ளார். இதனால் சாலை வழியாக அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதற்கிடையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டெருமையை தாக்க கூடாது என பொதுமக்கள் அறிவுரை கூறியும் அந்த நபர் அதனை கண்டுகொள்ளாமல் தாக்கியுள்ளார்.
எனவே காட்டெருமையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த நபர் காட்டெருமையை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.