Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை…. குட்டியால் தாமதமான பணி…. உடைந்து நாசமான பொருட்கள்….!!

வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வெளியே கொண்டு வந்தனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் தன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமை திடீரென நிலை தடுமாறி தன்ராஜின் வீட்டு மேற்கூரையை உடைத்து கொண்டு வீட்டிற்குள் விழுந்துவிட்டது. இதனை அடுத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையால் வெளியே வர இயலவில்லை. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டெருமையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த வீட்டிற்கு வெளியே குட்டி நின்று கொண்டிருந்ததால் மீட்கும் பணி சற்று தாமதமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதியில் இருப்பவர்களை வனத்துறையினர் பாதுகாப்பாக நிற்க வைத்து விட்டு வீட்டின் கதவை திறந்து விட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை வெளியே வந்தது. அதன் பிறகு அந்த காட்டெருமை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ஆனால் சுமார் 3 மணி நேரமாக காட்டெருமை வீட்டிற்குள்ளேயே சுற்றி வந்ததால் அங்குள்ள அனைத்து பொருட்களும் நாசமாகி விட்டது. எனவே சேதமடைந்த பொருட்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |