Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் நடந்துருக்கும்… உடலில் இருந்த அடையாளங்கள்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

வனப்பகுதியில் 8 வயதான ஆண் காட்டெருமை இறந்து கிடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் காட்டெருமை, புலி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் வால்பாறை பகுதியில் உள்ள முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை இறந்து கிடந்ததை பார்த்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்ட போது அதன் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் செந்நாய்,  சிறுத்தை போன்ற விலங்குகள் காட்டெருமையின் உடலை தின்றதற்கான அடையாளமும் இருந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடப்பது 8 வயதான ஆண் காட்டெருமை எனவும், காட்டெருமைகள் ஒன்றோடு ஒன்று மோதியதால் இவ்வாறு இறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |