Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கழுத்தில் சிக்கியிருந்த கயிறு…. அவதிப்பட்ட காட்டெருமை…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டெருமையின் கழுத்தில் சிக்கியிருந்த பிளாஸ்டி கயிற்றை வனத்துறையினர் வெட்டி அகற்றியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனையட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கயிறு கழுத்தில் சுற்றிய நிலையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று அவதிப்பட்டு வந்துள்ளது. இந்த காட்டெருமை தீவனம் சாப்பிட முடியாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் காட்டெருமைகள் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர்.

ஆனால் அந்த காட்டெருமை மயக்கம் அடையாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததால் சுமார் 6 முறை வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். இதனை அடுத்து மயங்கி விழுந்த காட்டெருமையின் கழுத்திலிருந்த பிளாஸ்டிக் கயிற்றை வனத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியதோடு, அதன் காயத்திற்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மயக்கம் தெளிந்து அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

Categories

Tech |