Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துரத்திய நாய்…. இரும்பு கதவில் சிக்கி காட்டெருமை மரணம்….. கொடைக்கானல் அருகே சோகம்…!!

கொடைக்கானல் அருகே இரும்பு கதவின் மேல் பகுதியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் சீசன் தொடங்கி விட்டதன் காரணமாக வனப் பகுதியில் இருக்கக்கூடிய காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும், அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிந்தும் வந்தன. இந்நிலையில் எப்போதும் போல் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமை ஒன்று தனியாக ஊருக்குள் வந்துள்ளது. எருமையை கண்ட நாய்கள் உடனடியாக குரைக்கத் தொடங்க மிரண்டுபோன காட்டெருமை ஓடியது.

பின் நாய்கள் விரட்ட மிகவும் பதறிப்போன காட்டெருமை எதிரே போடப்பட்டிருந்த இரும்புக் கதவை தாண்ட முயன்றது. அப்போது கதவின் மேல் பகுதியில் ஊசியாக இருந்த கம்பிகள் எருமையின் வயிற்றில் குத்தி கிழிக்க, உயிருக்கு போராடிய நிலையில் தலைகீழாக தொங்கியபடி காட்டெருமை அலறியது. அலறல் சத்தம் கேட்ட ஊர் மக்கள் உடனடியாக அங்கு கூடி காட்டெருமையை கண்டதும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் வருவதற்கு முன்பு காட்டெருமை பரிதாபமாக இருந்தது.

பின் இறந்த காட்டெருமையை மீட்டு வனப்பகுதியில் அதிகாரிகள் புதைத்தனர். மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து கம்பி வேலி அல்லது இரும்புக் கதவுகளை அமைக்கும்போது வீட்டு உரிமையாளர்கள் அதன் மேற்பகுதியில் இது போன்ற கூர்மையான பொருட்களை வைத்து அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Categories

Tech |