காட்டு யானைகள் ஒர்க் ஷாப்பை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் துப்புகுட்டிபேட்டை பகுதியில் இருக்கும் ராஜா என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்புக்குள் புகுந்து விட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் ஒர்க்ஷாப்பின் மேற்கூரையை உடைத்து நாசப்படுத்தி உள்ளது. மேலும் காட்டு யானைகள் ஷாப்பில் இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகள் சேதப்படுத்திய ஒர்க் ஷாப்பை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து காட்டு யானைகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.