சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டகானபள்ளி கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இந்த யானை கிராமத்தில் அங்குமிங்கும் கோபத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து சாலையில் சுற்றித்திரிந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, யானைகள் ஊருக்குள் வராமல் தடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.