Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்க விரட்டுனா அங்க போகுது… எல்லை மீறும் அட்டகாசம்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் டீ கடையை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் வால்பாறை பகுதியில் அமைந்திருக்கும் நசீர் என்பவரின் டீ கடையை உடைத்து நாசப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முற்படும்போது வனத்துறையினர் ஒலி எழுப்பி அதனை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Categories

Tech |