Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்த்து விட்டது…. எல்லை மீறும் அட்டகாசம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

காட்டு யானை தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், வாழையை தின்றும் நாசப்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூடலூர் பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் ஒரு காட்டு யானை வர்க்கீஸ், குஞ்சப்பா போன்ற விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்து விட்டது.

அதன் பிறகு காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி உள்ளது. இவ்வாறு அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |