Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்….. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி போன்ற வனப்பகுதிகளில் யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளது. இந்நிலையில் மேடுமுத்துக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி, அகலக்கோட்டை போன்ற கிராமங்களுக்குள் நுழைந்து காட்டு யானைகள் விளை நிலங்களில் உள்ள பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது.

அதன்பிறகு காட்டு யானைகள் அங்கிருக்கும் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்தன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |