Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. வேதனையில் வாடும் விவசாயிகள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை…!!

காட்டு யானைகள் வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பாடந்தொரை பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார்.

இதனையடுத்து காட்டு யானைகள் இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்து நாசப்படுத்தியுள்ளது. எனவே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |