காட்டு யானை தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஓடக்கூலி பகுதிக்குள் இரவு நேரத்தில் புகுந்த காட்டுயானை முகுந்தன், சாஜன் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை இடித்து அட்டகாசம் செய்துள்ளது. அப்போது தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பின் வாசல் வழியாக தப்பித்து விட்டனர்.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அதன் பிறகு முகுந்தன் மற்றும் சாஜனின் குடும்பத்தினர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்த கதவு உட்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்து விட்டதால் அதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அவர்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.