Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல… களமிறங்கிய 2 கும்கி யானைகள்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பொருட்டு இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, நாடுகாணி, தேவாலா, கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தப் பகுதிகளுக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழையும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இந்நிலையில் முதுமலையிலிருந்து உதயன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,  மலைப்பாதையில் 2 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, உரிய நேரத்தில் சென்று ஊர்களுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து ரோந்து பணியில் ஈடுபடுவதன் மூலம் காட்டு யானைகளின் நடமாட்டம் குறைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |