Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த சீசன்ல ரொம்ப கவனமா இருங்க… தூக்கி வீசப்பட்ட கார்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை வீட்டின் சுவற்றில் தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்குள் மீண்டும் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை பசீர் என்பவரின் காரை தூக்கி வீட்டின் சுவற்றில் ஓங்கி வீசியது. இதனால் காரும், அந்த வீட்டின் சுவரும் சேதம் அடைந்துவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரக அதிகாரி மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இச்சம்பவம் பற்றி வனத்துறையினர் கூறும்போது, மரங்களில் பல சீசனை முன்னிட்டு பலாப்பழங்கள் பழுத்து தொங்குவதால் அதனை சாப்பிட காட்டு யானைகள் வருவதாகவும், பொதுமக்கள் இரவு நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |