Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு… ஆத்திரத்தில் கிராமத்தினர்..!!

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே காட்டு யானை தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (48). அவரது மகன் பிரசாந்த் (20). கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு அவரது வீடு அருகே அவரது மகன் பிரசாந்தை காட்டு யானை தாக்கிவிட்டு ஆக்ரோஷத்துடன் வந்தது. அச்சமயத்தில் வீடு திரும்பிய கவுன்சிலர் ஆனந்தராஜையும் தாக்கியது. பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் இறந்தனர். இதே பகுதியில் நேற்று முன்தினம் ஒருவரை யானை தாக்கி கொன்றது.

இந்நிலையில் மீண்டும் தந்தை மகன் இருவரை யானை தாக்கிக் கொன்றதால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானை அதே இடத்தில் சுற்றி வருவதால் இருவர் உடலும் எடுக்கப்படாமல் உள்ளது. யானை நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. திராவிடமணி வன அலுவலர் சுமேஷ்சோமன் தாசில்தார் மகேஸ்வரி மக்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |