Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தப்பித்து சென்ற குடும்பத்தினர்…. வீட்டை முற்றுகையிட்ட யானைகள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஆமைகுளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனை அடுத்து காட்டுயானைகள் மணிமாறன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது. இதனை பார்த்ததும் அச்சத்தில் மணிமாறனின் குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே தப்பித்து ஓடிவிட்டனர்.

அதன்பின் காட்டு யானைகள் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் காட்டு யானை சேதப்படுத்திய பொருட்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |