காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து நாசப்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனகொண்டபள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து இந்த கிராமத்திற்குள் புகுந்து விட்டது. இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை காட்டு யானைகள் மிதித்து நாசப்படுத்தியது.
அதன் பின் அதிகாலை நேரத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மேளம் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.