காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய குட்டி கிராமத்தில் ஏராளமான வாழை மரங்கள் மற்றும் தக்காளி செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இந்த கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஐந்து ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் மற்றும் வாழை மரங்களை நாசப்படுத்தியது.
அதன்பின் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு காட்டு யானை ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். எனவே யானை சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.