Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உறுப்புகள் பலவீனம் ஆகிட்டு…. காட்டு யானைக்கு நேர்ந்த சோகம்…. கால்நடை மருத்துவர்களின் தகவல்….!!

மரக் கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்த போதிலும், காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காயமடைந்த ஒரு ஆண் காட்டு யானை சுற்றி திரிந்துள்ளது. இதனை வனத்துறையினர் கடந்த மாதம் 17-ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியோடு பிடித்து அபயரண்ய முகாமில் இருக்கும் மரக்கூண்டில் அடைத்து விட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் காட்டு யானையின் உடலை கிரேன் உதவியுடன் வனத்துறையினர் கூண்டிற்கு வெளியே எடுத்துள்ளனர்.

இதனை அடுத்து கால்நடை மருத்துவர்கள் இறந்த காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதனை அங்கிருக்கும் வனப்பகுதியில் புதைத்துவிட்டனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும் போது, நீண்ட நாட்களாக இருந்த காயத்தால் உடல் உறுப்புகள் பலவீனமடைந்து காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யானை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |