காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் மச்சிகொல்லி, பேபி நகர் போன்ற பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலை நேரத்தில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வனத்துறையினரை ஒரு காட்டு யானை விரட்டி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.