Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டி ஈன்ற காட்டு யானை…. வனத்துறையினரின் கண்காணிப்பு….. தொழிலாளர்களுக்கு அறிவுரை….!!

தேயிலைத் தோட்டத்தில் பெண் காட்டு யானை குட்டியை ஈன்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களாக 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேயிலைத் தோட்டத்தில் பெண் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. இதனால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது. எனவே பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வனத்துறையினர் அந்த காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த காட்டு யானைகளை குட்டியுடன் சேர்த்து வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர். அதன் பிறகு பச்சை தேயிலை பறிக்கும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |