Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே நின்ற காட்டு யானை…. 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு… நீலகிரியில் பரபரப்பு…!!

ஒற்றை காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றதால் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்லாதபடி யானை ஓன்று வழிமறித்து நின்றுள்ளது. இதனை பார்த்தவுடன் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டனர்.

இதனை அடுத்து ஒலி எழுப்பியவாறு  சாலையை கடக்க முயன்ற சில வாகன ஓட்டிகளை காட்டு யானை துரத்தி சென்றுள்ளது.  இந்நிலையில் சுமார் 1 1/2  மணி நேரம் அங்கேயே நின்று விட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அதன் பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதனையடுத்து காட்டு யானைகள் சாலைக்கு வருவதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என வனத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |