Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதற்காக சென்ற காவலாளி…. புதர் மறைவில் நின்ற விலங்கு….குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

யானை மிதித்து இரவு நேர காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் முத்துசாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த ஒரு யானை சற்றும் எதிர்பாராத சமயத்தில் முத்துசாமியை தாக்க முயற்சித்துள்ளது.

இதனால் அச்சத்தில் ஓடிய முத்துசாமியை காட்டு யானை விடாமல்  துரத்தி சென்று தனது துதிக்கையால் தூக்கி வீசியதோடு, மிதித்துக் கொன்று விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |