Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியுடன் உலா வரும் யானை…. தீவிர கண்காணிப்பு பணி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் அங்கும் இங்கும் உலா வருகிறது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டிருப்பதால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |