ஒற்றை காட்டுயானை சாலையில் சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலசோனை பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கொல்லப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
மேலும் அந்த காட்டுயானை சாலையில் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.