காட்டு யானை மீது அதிகமான பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானையை சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். இதற்காக முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பாகுபலி யானை பிடிக்கும் முயற்சித்தபோது அது வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனை அடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாகுபலி யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஏராளமான பட்டாசுகளை வனத்துறையினர் பாகுபலி காட்டு யானை மீது வீசி வெடித்துள்ளனர். இதனால் பாகுபலி காட்டு யானை பிளிரியவாறு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது ஏற்கனவே கூடலூர் பகுதியில் யானை மீது தீ கொளுத்தி போட்டதால் அந்த யானை உயிரிழந்து விட்டது. எனவே வனத்துறையினர் இவ்வாறு ஒரே நேரத்தில் அதிகமான பட்டாசுகளை காட்டு யானை மீது வீசக் கூடாது என தெரிவித்துள்ளனர்.