வாகன ஓட்டிகளை ஒற்றை காட்டு யானை துரத்தி சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார் போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானைகள் மாலை 4 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளது. அப்போது ஒரு காட்டு யானை திடீரென அவ்வழியாக வந்த வாகனங்களை துரத்திக் கொண்டு ஓடியது.
இதனை பார்த்ததும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு வாகனங்களை பின்னோக்கி இயக்கியுள்ளனர். ஆனாலும் காட்டு யானை அவர்களை துரத்தி சென்று சிறிது நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. எனவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.