Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்ற காட்டு யானை….. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டு யானை நீண்ட நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Categories

Tech |