Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரேடியோ காலர் பொருத்தி…. விடுவிக்கப்பட்ட காட்டு யானை…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

சிகிச்சை முடிந்த பிறகு காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியில் சுவாசப் பிரச்சனையால் அவதிபட்டு வந்த ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்தது. இந்த யானையை கடந்த மே மாதம் வனத்துறையினர் பிடித்து விட்டனர். அதன் பிறகு மருத்துவ குழுவினர் மரக் கூண்டில் அடைக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் மரக்கூண்டில் இருந்த ரிவால்டோ யானையை கும்கி யானைகளின் உதவியோடு வெளியே கொண்டு வந்துள்ளனர்.

அதன் பிறகு கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி வனத்துறையினர் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறும் போது, சிகிச்சை அளித்த பிறகு காட்டுயானை ஆரோக்கியத்துடன் இருப்பதால் மசினக்குடி ஊரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலரை வைத்து வனத்துறையினர் அதனை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |