ஆந்திர மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சாலையை கடக்காத வகையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்தபோது வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொங்கு நாடா எனும் பகுதி அடர் வன பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் ரயில்வே பாதையில் வாகனங்கள், விலங்குகள் நுழையாத வகையில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்து ஊருக்குள் நுழைய முற்பட்டன. ஆனால் வனதுறையினர் போராடி அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.