கனடாவில் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயால் ஒரு நகரம் முழுவதுமாக எரிந்து சாம்பலான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் லிட்டன் என்ற சிறு நகரம் காட்டுத்தீயால் அழிந்துவிட்டது. ஒரே நாளில் 62 தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நகரம் 90% சாம்பல் ஆனது. ஆனால் அதற்குள் அங்கு வசித்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நகரத்திற்கு உதவி வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்நகரில் தொடர்ந்து மூன்று நாட்களாக கடும் வெப்பம் நிலவியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.