Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ….. பற்ற வைத்ததும் நாங்கள் தான்…. அணைத்ததும் நாங்கள் தான்….. வனத்துறை விளக்கம்…!!

விருதுநகர் அருகே காட்டு தீ அணைப்பது குறித்து வனத்துறை  அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவது வழக்கம்.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் மான், புலி, கரடி, நரி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் உயிரிழப்பதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகும்  நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் வனத்துறையினருக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அணைப்பதற்குமான பயிற்சி நேற்று தாணிப்பாறையில் வைத்து நடைபெற்றது.

சுமார் 200க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த முகாமில் காட்டுத்தீ ஏற்பட்டால் அதனை அணைப்பது எப்படி? தீ பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட பின் நிஜமாகவே மலையடிவார பகுதியில் உள்ள காட்டில் தீயைப் பற்ற வைத்து அதனை செயல் முறை விளக்கமாக  அனைத்து காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது. புகையை கண்டு அதிர்ச்சியில் வந்து பார்த்த கிராம மக்களிடம் வனத்துறையினர் விளக்கம் அளித்த பின் அவர்கள் திரும்பி சென்றனர்.

Categories

Tech |