அமெரிக்காவில் காற்று பலமாக வீசுவதால் காட்டுத்தீ அதிவேகத்தில் பரவிக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் பிளாக்ஸாடாஃப் என்னும் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. மேலும் பலமான காற்று வீசியதால் காட்டுத்தீ தற்போது அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. தீ பரவிக் கொண்டிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது வரை, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அளவு கொண்ட வனப்பகுதி நெருப்பில் கருகி நாசமாகி விட்டது. மேலும், கோடை காலம் என்பதால் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் நெருப்பை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். பலமாக காற்று வீசிக்கொண்டிருப்பதால் தீயை அணைக்கும் பணி சவாலாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.