பிரிட்டன் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்படும் காட்டெருமையை பராமரிக்க ஆட்கள் தேவை என்று அறிவிப்பை கண்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.
ஐரோப்பிய நிலப்பரப்பில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாக கருதப்படுவது காட்டெருமை. பிரிட்டனில் ஒரு காலத்தில் இருந்த காட்டெருமை இனப்பெருக்கம் இப்போது முற்றிலும் அழிந்துவிட்டது. அவற்றை நெதர்லாந்து, ருமேனியா, போலந்து நாடுகளில் இருந்து கொண்டு வந்துபிரிட்டனில் வுட்லேண்ட் பகுதியில் வைத்து பராமரிக்க தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். காட்டெருமைகள் சுற்றுச்சூழல் பராமரிப்பு மிகவும் முக்கியமான விலங்கு. எனவே அவற்றால் காடுகள் வளம் பெறும் என்கின்றனர் பிரிட்டிஷ் வனவிலங்கு ஆய்வாளர்கள்.
தற்போது கொண்டு வரப்படும் காட்டெருமைகள் 500 ஏக்கர் பரப்பிலான வடபகுதியில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு 2 ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியானதை கண்டு நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து விட்டன என்கின்றனர் பூங்கா நிர்வாகிகள்.