கனடாவில் சுமார் 300 இடங்களில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 300 இடங்களில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த காட்டுத்தீயால் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுமார் 14 நாட்கள் இந்த அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.