செங்கல்பட்டு அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சாலை முழுவதும் கருப்பு புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி அருகே குப்பை கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து அருகிலுள்ள காட்டிற்கு தீ பரவி சில மரங்கள் எரிய ஆரம்பித்தன. மத்திய சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் கரும் புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.