பொவிலியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீயில் எரிந்து நாசமாகின.
பொலிவியாவில் மீண்டும் பயிர்செய்யக்கூடிய விவசாய நிலங்களில் காய்ந்த புற்களுக்கும், களைச்செடிகளுக்கும் வைக்கப்பட்ட தீ சரசரவென பிடித்து சென்று வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதில் வனப்பகுதியில் இருந்த மரங்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன.
பொலிவியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீ எரிகிறது, அதே நேரத்தில் தீ ஒன்று பராகுவேவின் எல்லையை நெருங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாண்டா க்ரூஸ் அருகிலுள்ள வனப்பகுதி தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அருகில் குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் தீயணைப்பு படையினர் தீவிரமாக தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 16 இடங்களில் தீ இன்னும் வேகமாக எரிந்து வருகிறது. தீயை விரைந்து அணைப்பதற்க்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை விரைந்து அனுப்பி வைப்பதாக அந்நாட்டு அதிபர் எவொ மொரல்ஸ் (Evo Morales) தெரிவித்துள்ளார். மேலும் அவர் முதலில் எங்கு தீ பற்றியது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.